மரண அறிவித்தல்

திருமதி. இராசலட்சுமி தர்மரெட்ணம்

Tribute Now

யாழ். 83 ஸ்டான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Juvisy-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி தர்மரெட்னம் அவர்கள் 15.10.2022 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பொன்னையா தர்மரெட்னம்(ஓய்வுபெற்ற கமநல சேவை ஓவசியர்) அவர்களின் அருமை மனைவியும், சற்குணராஜா (மன்னார்), பவானி(பிரான்ஸ்), கிருபராஜா(ஜேர்மனி), சுரேஸ்குமார் (பிரான்ஸ்), பிரேமகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சிறீனா (மன்னார்), இரத்னசிங்கம்(பிரான்ஸ்), வதனி(ஜேர்மனி), சுமதி(வவுனியா), சுபா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான அமிர்தலட்சுமி(ஜேர்மனி), சுப்ரமணியம் (மட்டக்களப்பு) மற்றும் திருமணி(யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பரமேஸ்வரன் (கொழும்பு), புவனேஸ்வரி (மட்டக்களப்பு), செல்வரத்தினம் (யாழ்ப்பாணம்), செல்வரத்தினம் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

இவர் சரோன், நிரோன்(மன்னார்), மதன், சாலினி(பிரான்ஸ்), ஜனனி, ஜாதவி, அஸ்வினி(ஜேர்மனி), பிரதீபன்(வவுனியா), பிரின்சி, பிரித்தி, பிரியந்தி, ஏஞ்சல், ஹஸ்வினி, சாமுவேல்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் இசானி, அலேனா, நிலான், அலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்