மரண அறிவித்தல்

திரு. இராமலிங்கம் அருமைநாயகம்

(ஓவசியர்-யாழ் போதனா வைத்தியசாலை நீர்பாசனத் திணைக்களம் ,விவசாயத் திணைக்களம்)

Tribute Now

யாழ் நல்லூரை பிறப்பிடமாகவும், அராலி வடக்கு நாகேந்திரா மடத்தை வசிப்பிடமாகவும் கொண்னவரும், ஓய்வுபெற்ற ஓவசியர்-யாழ் போதனா வைத்தியசாலை, நீர்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றில் கடமை புரிந்தவரும்,லங்கா சமசமாய கட்சி யாழ்ப்பாணத்தின் முன்னாள் தலைவருமான இராமலிங்கம் அருமைநாயகம் அவர்கள் 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - அன்னாம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பகவதி அவர்களின் பாசமிகு கணவரும், மஞ்சுளாதேவி (முன்னாள் SDT), சதானந்தநாயகம் (ஸ்ரீ லண்டன்), காலஞ்சென்ற சத்தியானந்தநாயகம் (ரவி) மற்றும் சர்ப்பவானந்தநாயகம் (ரகு கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (மக்கள் வங்கி), மற்றும் சத்தியவதனி (லண்டன்), மலர்விழி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 

இவர் ஹர்ச்சுன் (அவுஸ்ரேலியா), வினோசன் (தபாலதிபர்மானிப்பாய்),  கிஷோஜினி (லண்டன்), டெனோசன் (லண்டன்),சர்மி (லண்டன்), ஹரிகரன் (லண்டன்), மதுசா (கனடா), அர்வின் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 

இவர் லண்டனைச் சேர்ந்த லவன், அவானா, ஸ்ரீயா ,ஆத்விகா ஆகியோரின்  அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்