மரண அறிவித்தல்

திரு. இராமையா செல்லத்துரை

உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்

Tribute Now

யாழ் புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி கனடா  Torontoஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  இராமையா செல்லத்துரை அவர்கள் 05.09.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று  வாய்க்காற்தரவைப் பிள்ளையார் திருவடிகளைச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

லோகசறோஜா அவர்களின் ஆருயிர் கணவரும், புஷ்பா (நோர்வே), ரஞ்ஜினி (கனடா), பாரதி (பிரித்தானியா ), தயாபரன் (பிரித்தானியா), சுகந்தினி (நோர்வே), ஜீவா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சிவராஜா (நோர்வே), தெய்வேந்திரன்(கனடா), கிருபாகரன் (பிரித்தானியா), மாலதி (பிரித்தானியா), நந்தகோபன்(நோர்வே), விமலராசா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தவமலர், மகாலிங்கம், சிவஞானம் மற்றும் மகேஸ்வரி, செல்வரட்ணம், அருளம்மா , யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கமலாம்பாள், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியலட்சுமி, பத்மராணி, பாலச்சந்திரன், கௌரி, ருக்மணி, காலஞ்சென்றவர்களான காசிநாதர், கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

வேணுகா ,ஆர்த்திகா , கிரீசன், பானுஷா , விசாகன், வைஷ்ணவி, பிரணவி, லக்ஷ்மி, ஹரிணி, கவினன், சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்