மரண அறிவித்தல்

திரு. ராஜ்குமார் அருணாசலம்

Tribute Now

யாழ். கொக்குவில் நாமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜ்குமார் அருணாசலம் அவர்கள் 19.10.2023 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மேகலா அவர்களின் அன்புக் கணவரும், வினுஷா, விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற இரத்தினகுமார், அருணகுமார்(லண்டன்), நந்தகுமார் (லண்டன்), நிமலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தபோநிதி(லண்டன்), சிவகுமுதினி(லண்டன்), சிவதர்ஷினி(லண்டன்), மகேசன் (கனடா), யசோதா(கனடா), விமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

நந்தினி(கனடா), ஜெயம்(கனடா), குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்