மரண அறிவித்தல்

திருமதி. இராஜேஸ்வரி நந்தகுமார்

Tribute Now

யாழ் பருத்தித்துறை வியாபாரிமூலையை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நந்தகுமார் (முன்னாள் அதிபர் பரு/ மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை, க/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், க/ விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம்) அவர்கள் 2023.05.14 (ஞாயிற்றுகிழமை) இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செகநாதபிள்ளை - இரத்தினம் அவர்களின் கனிஷ்ட புதல்வியும் ஆவார்.

 

பேராசிரியர் வைத்திலிங்கம் நந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும், தனஞ்ஜெயன் (வளவாளர் (ICT) வலயக்கல்வி பணிமனை- கம்பளை), Dr. சஞ்ஜீவன் (ஆஸ்திரேலியா), ஜெயதர்ஷன் (தர நிர்ணய கட்டுப்பாட்டாளர், கனடா), Dr. ஜனனி (கொத்மலை பிரதேச வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

அமரர் சரஸ்வதி கணபதிப்பிள்ளை, அமரர் இராஜலக்ஷ்மி பத்மநாதன், செகநாதபிள்ளை உலகநாதபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அமரர் கதிரித்தம்பி வைத்திலிங்கம், அமரர் சரஸ்வதி வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
 

 
பிரபாலினி (தாதிய உத்தியோகத்தர் கண்டி தேசிய வைத்தியசாலை), Dr. சுஜிதா (ஆஸ்திரேலியா), அஜந்தா (திருவள்ளுவர் தமிழ் பாடசாலை அதிபர் கனடா), Dr. சஞ்சீவன் ( நுவரெலியா பொது வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

அருணி, திவ்யன், ஜெயந்தன், தருண் (ஆஸ்திரேலியா), டிலான் (ஆஸ்திரேலியா), சச்சின் (ஆஸ்திரேலியா) தரணியன் (கனடா), காயத்ரி (கனடா), ஹேரிஸ், தேஜஸ் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார். 

 

இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல் | குடும்பத்தினர்