மரண அறிவித்தல்

திருமதி. புவனேந்திரன் மீனலோஜினி

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரன் மீனலோஜினி அவர்கள் 19.03.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணசாமி - உலகநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரம்சோதி - தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற புவனேந்திரன் (குட்டி) அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரன், காலஞ்சென்ற வாணி, கீர்த்திகா, ராகவன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

 

மாலதி, தவநேசன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அசோக்குமார், கவினேஷ், ஜஷானி, ஹர்சினி, ஆர்யகி, ஆரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

சறோஜினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற பாலச்சந்திரன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வைரமுத்து, அருட்செல்வம், துரைச்செல்வம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலமுரளி, சிவராம் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்