மரண அறிவித்தல்

திருமதி. பூம்பாவை சோமநாதன்

Tribute Now

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sulzbach ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூம்பாவை சோமநாதன் அவர்கள் 08.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தையா சோமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சூரியகுமாரி, சந்திரகுமார், காலஞ்சென்ற பிரேமகுமாரி, நந்தகுமார், சாந்தகுமார், மணிவண்ணன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், சிவபாதசுந்தரம், வில்வரட்ணம், குணபூசணி, நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.