மரண அறிவித்தல்

திருமதி. பூலோகநாயகி மாணிக்கவாசகர் (கிளி)

Tribute Now

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரம் இறுப்பிட்டியை வாழ்விடமாகவும், இல 240 தேக்கம் தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகநாயகி மாணிக்கவாசகர் அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் இளையமகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(பழனி- வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

கிருஸ்ணலதா(செட்டி- சுவிஸ்), வினாயகரூபன்(ரூபன்- ஜேர்மனி), விக்கினேஸ்வரன்(வரணி- வவுனியா), கௌரிதேவி(செல்லம்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சிவனடியாள்(ஆத்தை), திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனி ஆவார்.

 

ஐயாத்துரை,நாகரெத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,வசிகரன்(பவான்- சுவிஸ்), சுகந்தா(ஜேர்மனி), ராதிகா(வவுனியா), அன்பமுதன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

கோதைநாயகி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் அமிர்தநாயகி(லண்டன்), சிவலிங்கம்(சுவிஸ்), கிருபானந்தலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற சதானந்தலிங்கம்(சுவிஸ்) மற்றும் தெய்வநாயகி(சுவிஸ்), சுவீந்திரலிங்கம்(ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் லீலாவதி, காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் ஜெயராணி, வினிதராணி, ராஜகுமுதினி, மணிவண்ணன், சிவசக்தி, ரஜனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

வகிஷா, அரிசன், கரிசன், சுவீனா, விஸ்வா, சுமீரா, பவின்சன், சபின்ஷன், கவின்யா, அனா, அனிசன், அக்‌ஷை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்