மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை தேவபாதம்

Tribute Now

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தேவபாதம் அவர்கள் 20.07.2022 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னாா், காலஞ்சென்ற வயிரமுத்து பொன்னுத்துரை - புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா - பாா்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் தங்கேஸ்வரி (ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- சிறுப்பிட்டி GTMS பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும், கம்சிகா(தாதியர் பீடம்- கொழும்புப் பல்கலைக்கழகம்), சானுகா(கால்நடை வைத்திய பீடம்- பெரதேனியாப் பல்கலைக்கழகம்), சுபஸ்திகா (சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் தேவராணி(இலங்கை), திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற கிராம சேவை அலுவலர், கனடா), சிவலோகநாதன்(கனடா), சுகிர்தராணி(கனடா), யமுனராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை, கனடா), ஆனந்தராசா(கனடா), காலஞ்சென்ற சி. யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்