மரண அறிவித்தல்

திருமதி. பொன்னம்பலம் நாகேஸ்வரி

Tribute Now

யாழ். திருநெல்வேலி கிழக்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகேஸ்வரி அவர்கள் 30.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், தம்பாப்பிள்ளை - இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், பாலகிருஷ்ணன் (மொன்றியல், கனடா), சாந்தினி (மொன்றியல், கனடா), நளாயினி (மொன்றியல், கனடா), அருச்சுனா (ஐக்கிய அமெரிக்கா), ஜெயந்தன் (மொன்றியல், கனடா) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் தங்கா, புஸ்பநாதன், சுந்தரலிங்கம், கீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் தங்கேஸ்வரி,சத்தியபாமா, புகழானந்தம், புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற துரைச்சாமி, பஞ்சரட்ணம், பத்மினி- ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் சுதர்சன், சூட்டி, ஜஸ்மின், தரன், வினோத், பிந்தியா, சமீரா, கவியுகன், செலுமி, கஜபவன், செரீனா, கிசொந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

இவர் ஏரன், ஜேடன், தணீஷா, ஜெய்சான், ஏவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்