மரண அறிவித்தல்

திரு. பார்த்தீபன் மகேசு

Tribute Now

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா நெடுங்கேணி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பார்த்தீபன் மகேசு அவர்கள் 30.10.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார், திரு.மகேசு - செல்லத்தம்பி, திருமதி.வேதநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு.நல்லையா சபாரட்ணம், திருமதி.கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

இவர் தர்மினி அவர்களின் பாசமிகு கணவரும், ஆரணன், மிஹிரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் மைதிலி, பிரதீபன், ஹேமமாலதி, காலஞ்சென்ற உமாபாரதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் குருபரன், செந்தூரன், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் ஜார்த்தன், கெவின், சுபாஷ், அபிராமி, ஆரபி, ஆதீசன், அட்சயன், அனிதன், நிதிஷ், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்