மரண அறிவித்தல்

திருமதி. பரமேஸ்வரன் மனோன்மணி

Tribute Now

யாழ். காரைநகர் தட்டாம்புலம் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மனோன்மணி அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்ற ஆறுமுகம், அருளாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

மயூரன், கயூகரன், அகலியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், தேவமனோகரி, வைதேகி, பிரதீஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

தைனிகா, கவிநயன், சர்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

அத்துடன் திரைமலைநாதன், காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற மகேஸ்வரன், விக்னேஸ்வரன்(பிரித்தானியா), குகேஸ்வரன், யோகேஸ்வரன், கனகாம்பிகை, கமலாம்பிகை, வேதாம்பிகை, அனுசியா, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்