மரண அறிவித்தல்

திருமதி. பரமேஸ்வரி குஞ்சிதபாதம்

Tribute Now

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குஞ்சிதபாதம் அவர்கள் 14.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் - அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற Dr. குஞ்சிதபாதம் ஆறுமுகம் அவர்களின் ஆருயிர் மனைவியும், கணேஸ்வரி(உமா- கனடா), செந்தில்ரட்ணம், பவானி (அவுஸ்திரேலியா), சுசிலா, ஹரேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் குகநாதன்(கனடா), Dr. ஜெயமோகன், பிறேமா (அவுஸ்திரேலியா), சித்கணேசன், வசந்தகுமாரி(ராணி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் ஷோபா, சிவேஷ், சைலேஷ்(அவுஸ்திரேலியா), திவ்யன், மதுரி, கஜேந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

 

இவர் தீரன் ஜெயான் அவர்களின் அன்பு பூட்டியும், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம்(மலேசியா), பரஞ்சோதி(சோதி) மற்றும் இந்திராணி(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சிவபாதம், கெங்காதரன், பத்மநாதன் மற்றும் விசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்