மரண அறிவித்தல்

திருமதி. பகீரதி கந்தப்பிள்ளை

Tribute Now

யாழ் சரவணையைப் பிறப்பிடமாகவும் வேலணை மேற்கை  வாழ்விடமாகவும்,பிரான்ஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பகீரதி (சின்னக்கா) கந்தப்பிள்ளை அவர்கள் 07-12-2023 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற குழந்தைவேலு - பராசக்தி அவர்களின் அருமை மகளும், காலம்சென்ற பஞ்சாட்சரம் - வாலாம்பிகையின் ஆசை மருமகளும் ஆவார்.

 

கந்தப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், பஞ்சகரன், கிருபாகரன், சிவகரன், காயத்திரி, பராசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

பிரகலா, கீர்த்திகா, மிதுலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

லக்க்ஷனா, அஞ்சனா, நித்தியா, மயிலோன், கவின் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

 

கணேசலிங்கம் (யா/வேலணை மத்தியகல்லூரி முன்னாள் மாணவன், ஆசிரியர், அதிபர் ), காலம் சென்ற வள்ளிநாயகி மற்றும் குறிஞ்சிவேந்தன், மகாதேவன், சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

 

பாலசுப்பிரமணியம், ஞானபண்டிதன், அறிவழகி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

 

காலஞ் சென்றவர்களான அம்பிகா, திருநாவுக்கரசு, மற்றும் சாந்தி, திருமணச்செல்வி, வசந்தா, கணேசமூர்த்தி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்