மரண அறிவித்தல்

திருமதி. பாக்கியலெட்சுமி கனகலிங்கம்

Tribute Now

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலெட்சுமி கனகலிங்கம் அவர்கள் 02.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிரான்ஸில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கனகலிங்கம்(E K & CO காலி முன்னாள் உரிமையாளர், காலி சிவன் கோவில் முன்னாள் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும், அரவிந்தன்(ஜேர்மனி), முரளீதரன்(இலங்கை), சரவணபவன் (இலங்கை), வனிதா(நோர்வே), சத்தியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற பரமலிங்கம் (கனடா) மற்றும் காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்  ஆவார்.

 

ரதிதேவி(கனடா), ஜஸ்டீனா(இலங்கை), சிவகுமார்(நோர்வே), புராந்தகன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இமையவல்லி(கனடா), கலாவல்லி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

 

தித்தியா (கனடா), யூனிஸ் (இலங்கை), பியூலா(இலங்கை), ஜோன் (இலங்கை), லூக்(இலங்கை), யொஹானா(இலங்கை), யொனத்தன் (நோர்வே), சுவாதிகா(நோர்வே), பிரீதிகா(நோர்வே), நிவேதா(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

விசுவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கோபாலபிள்ளை(இலங்கை), லீலாவதி (இலங்கை), புனிதவதி(கனடா), காலஞ்சென்ற தருமலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்