மரண அறிவித்தல்

திருமதி. நேசரட்னம் சின்னத்தம்பி

Tribute Now

யாழ் மயிலிட்டிதெற்கு கட்டுவனை பிறப்பிடமாகவும் மிகுந்தபுரம் திருகோணமலை, பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நேசரட்னம் சின்னத்தம்பி  22/08/2023 ம் திகதி செவ்வாய்கிழமை பாரிஸ் பிரான்சில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. இளையதம்பி திருமதி. அன்னப்பிள்ளையின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான திருமதி ஞாணாம்பிகை, புஸ்பராணி, தேவராஜா, சேகராஜா, மற்றும் திருமதி சந்திரலீலா (கனடா), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின்  சகோதரி ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமியின் பாசமிகு மருமகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தருமலிங்கம், தங்கம்மா, அன்னம்மா, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியாவார்.

 

காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவி  ஆவார்.

 

இரஞ்சிதமலர் (பிரித்தானியா) , சுகுமார் (பிரான்ஸ்), விஜயகுமார் (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரான்ஸ்) ராஜ்குமார் (பிரித்தானியா), டிலிப்குமார் (பிரான்ஸ்), ஜயக்குமார் (பிரித்தானியா) சாந்தமலர் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.

 

ஶ்ரீவசந்தேஸ்வதன், இந்துமதி, நாளாயினி, உலகநாயகி, தயாநந்தி, அனுஷா,தனுஷா, ஜெயப்பிரகாஸ் அகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இரோத்தமி (அருண்), பிரித்தமி, டிலுஜா (கஜீபன்), கிரிசாந் (நிசானா), நிதர்சன், விஜித்தா, சிரானி, சிரிஸ், ரிசானி, ரிசாந், அக்‌ஷரா, அபினுஷன், சிந்துயா, ஜெனிற்றா, சுகிற்றா, அகியோரன் அன்புப்பேத்தியும்,டினோஜி, டர்வின், றியோ ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

 

தகவல் - குடும்பத்தினர்