மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரம் சிவகுமாரன்

Tribute Now

யாழ். சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுடையை வாழ்விடமாகவும், கனடா Toronto, Mississauga  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் சிவகுமாரன் அவர்கள் 10.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம் (மார்க்கண்டு மாஸ்டர்) - மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் - மங்கையற்கரசி தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

தேவமனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சேயந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

மகேந்திரன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

அம்பிகாதேவி, வசந்தாதேவி, காலஞ்சென்ற Dr. குகநேசன் மற்றும் சாந்தாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்