மரண அறிவித்தல்

திரு. நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி

Tribute Now

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி அவர்கள் 19.10.2022 (புதன்கிழமை) அன்று காலமானார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் (அப்பையா) - கனகமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளஞ்சிங்கநாதன் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும், ஸ்ரீரஞ்சினி(ஆசிரியை - முள்ளியவளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), ஸ்ரீறசந்தன்(சுவிஸ்), ஸ்ரீ வசந்தன்(லண்டன்), ஸ்ரீவதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் சிவனேஸ்வரி, செல்வரட்ணம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), வியாழம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை), தட்சணாமூர்த்தி (பூசகர்- புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயம்), தயாபரமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் விவேகானந்தம், பாக்கியலட்சுமி, விகிர்தபாலன், ரூபராணி, காலஞ்சென்ற ஜெயசிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் கங்காதரன்(கலைக்கண்ணன் பல்பொருள் வாணிப உரிமையாளர்- முள்ளியவளை), சுபாகரி(சுவிஸ்), அனித்தா(லண்டன்), மிதிலைநாதன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் ரிலக்சன்(விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், முஸ்லீம் மகா வித்தியாலயம், நீராவிப்பிட்டி), திலக்சனா (பேராதனைப் பல்கலைக்கழகம்), வேணுயன்(மு/கலைமகள் வித்தியாலயம்), அனுயன்(மு/ வித்தியானந்தக் கல்லூரி), தியாரா(சுவிஸ்), சபிசன்(லண்டன்), சாருசன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவர் ஸ்ரீராகவன்(ஜேர்மனி), கோகுலன் (பொறியியலாளர், கொழும்பு), சஜீவன்(சுவிஸ்), தசாபன் (பிரதேச செயலகம், நல்லூர்), கஜீவன், கேசிகா, தனூஸ்(Imperial College, London), கிரூஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், துஸ்யன்(பிராந்திய சுகாதார வைத்திய அதிகார - வவுனியா), கிருஸ்ணமேனன் (சுவிஸ்), ஜனகன்(ஜேர்மனி), வேர்த்திகா(ஆசிரியை- மு/தண்ணீருற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை), லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்