மரண அறிவித்தல்

திரு. நடராசா சிதம்பரநாதன்

(இளைப்பாறிய மருத்துவ ஆய்வுகூட நுண்கலைஞன்)

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிதம்பரநாதன் அவர்கள் 02.03.2024 (சனிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், நடராசா - அமிர்தவல்லியம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற கதிரவேலு - தங்கமணியம்மா தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும் ஆவார்.

 

இராஜேஸ்வரி அவர்களின் பிரியமான கணவரும், சுகந்தினி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற தையல்நாயகி, சிதம்பரநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

நரேஸ்குமார், லாவண்யா ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும் ஆவார்.

 

அபிராமி, ஆர்த்திகா, பிருந்தன், பிரணவன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை, இரத்தினவடிவேல் மற்றும் ஞானசம்பந்தபிள்ளை, ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, குமரேசர், சரவணப்பெருமாள், சவுந்தரி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ருத்திரசிகாமணி, ஐயகணேசன் மற்றும் பத்மாவதி, யோகசந்திரன், லக்ஸ்மி, ஞானாம்பிகை ஆகியோரின் சகலனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்