மரண அறிவித்தல்

திருமதி. மயில்வாகனம் நவமலர்

வவுனியா யாழ். இந்துக்கல்லூரி ரீச்சர், வவுனியா மகாவித்தியலயம், இருபாலை கலட்டி கலவன் பாடசாலை, கண்டி மோபேர Convent

Tribute Now

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கண்டி, இருபாலை, நீராவியடி, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நவமலர் அவர்கள் 02.11.2022 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புலோலியை சேர்ந்த காலஞ்சென்ற சபாவதி(ஆசிரியர்) - சின்னம்மா(ஆசிரியை) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், நீராவியடியை சேர்ந்த காலஞ்சென்ற அம்பலவாணர் - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும், அம்பலவாணர் (கனடா), அருளம்பலம் (கனடா), வசந்தகுமார் (கனடா), விஜி(கனடா), காலஞ்சென்ற குமாரசூரியர்(கனடா), ரஞ்சினி (பிரான்ஸ்), சாந்திகுமாரி (அவுஸ்திரேலியா), வசந்தராணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சௌந்தரநாயகம் (வவுனியா - ஆசிரியர்), நேசமலர்(யாழ்ப்பாணம் - ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் ராஜேஸ்வரி, லலிதா, அமுதா, காலஞ்சென்ற குருபரன், சுபநேசன், சின்னப்பு, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

இவர் திலிப்குமார், நிசாகரன், செரின், அர்சுன், ரொமேஸ், ஜனனி, காலஞ்சென்ற கார்திகா, தர்சிகா, முகுந்தன், வேதாகினி, சானு, ஆதுஸ், விதுஸ், திவாகரன், லக்சிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்