மரண அறிவித்தல்

திரு. முருகேசு தேவராசா

Tribute Now

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தேவராசா அவர்கள் 01.03.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு(கோப்பாய் வடக்கு) - றாசம்மா(அல்வாய்) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும் ஆவார். 

 

இவர் நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும், சுபாசினி (ஜேர்மனி), சுபாஸ்கரன் (ஜேர்மனி), சுதர்சினி (கனடா), யெயவர்த்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் சிறீதரன் (ஜேர்மனி), சிவேந்திரன் (கனடா), தயாயினி (ஜேர்மனி), றமேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற நவரத்தினராசா, செல்வராசா (பிரான்ஸ்), தங்கராசா (பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மராசா, புஸ்பவதி (கோப்பாய்), லலிதா (கொலன்ட்), பத்மினி(ஜேர்மனி), றுக்குமணி (கொலன்ட்), வர்ணராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் றுக்குமணி, ஞானம், யெயா, றஞ்சினி, பபி, நாகராசா (கொலன்ட்), காலஞ்சென்ற பத்மநாதன், ராஜகோபால், செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் ஹரிஷன், லக்‌ஷனா, மாகீஸ், யொஷீனா, றாகீஸ், றம்யா, ரன்யா, மரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் கந்தப்பிள்ளை, விஜயலக்சுமி, நாகேஸ்வரி, யோகாம்பிகை, சிவராசா, குணராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்