மரண அறிவித்தல்

திரு. முருகன் திரவியம்

Tribute Now

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், மருதங்கணியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் திரவியம் அவர்கள் 02.08.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லி, லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,வரதராசா, வசந்தராசா, மனோகரன், தர்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

தயாளினி, ரசீலா, சுமித்திரா, சசிகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

பிருந்தா, பிரித்திகா, ஆகாஷ், அனுசன், டனுசியா, சஞ்சித், சஞ்சிகா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், கனகலிங்கம் மற்றும் குணபாலு, ஜெயபாலு, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்