மரண அறிவித்தல்

திரு. மார்க்கண்டு அமிர்தலிங்கம்

Tribute Now

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குழத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Lelystad ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு அமிர்தலிங்கம் அவர்கள் 21.08.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இராமநாதி - சின்னத்தங்கம் தம்பதிகள் மற்றும் பொன்னையா - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், காண்டீபன்(பிரித்தானியா), தர்மினி(பிரித்தானியா), குமுதா(நெதர்லாந்து), அமுதா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார். 

 

இவர் திருமகள், கேசவன், கஜானன், பாலராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் காசினி, ஆரியன், கயல்விழி, ஆதிரா, நயனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் தர்மலிங்கம்(இலங்கை), இரத்தினம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, அருளம்பலம் மற்றும் குகதாஸ்(இலங்கை), யோதீஸ்வரன்(ஈசன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் கணவதிப்பிள்ளை(இலங்கை), இராசமணி (பிரித்தானியா), அருட்சோதிநாதன்(இலங்கை), செல்வநாயகம் (இலங்கை), காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்