மரண அறிவித்தல்

திருமதி. மனோன்மணி கணேசநாதன்

Tribute Now

யாழ். வல்வை மண்ணைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானறு, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோன்மணி கணேசநாதன் அவர்கள் 15.06.2024 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைசிற்றம்பலம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் - பாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிதம்பரநாதன் கணேசநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், சௌதாமணி (லண்டன்), லலிதாமணி (கனடா), காலஞ்சென்ற ஜெகநாதன், ரங்கநாதன் (கனடா), காலஞ்சென்ற வனிதா மணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான திரு.தி. சுப்ரமணியம், திருமதி. செல்வரட்ணம் செல்வராஜா, திரு. தி. கோபாலவடிவேல், திருமதி. நேசமணி ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இராஜேந்திரா, ரவிந்திரதாஸ், பரிமளா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

ஜெகன், சௌமியா, சோபியா ஆகியோரின் பேரன்புமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்