மரண அறிவித்தல்

திரு. மயில்வாகனம் சிவலிங்கம்

Tribute Now

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவலிங்கம் அவர்கள் 20.07.2022 (புதன்கிழமை) அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் சரஸ்வதி அம்பாள் (மருந்தாளர்) அவர்களின் ஆசைக் கணவரும், சிவராகுலன் (பிரித்தானியா), சிவகௌரி (பிரித்தானியா), சிவதர்சினி(கனடா), சிவகீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் நிவேதினி(பிரித்தானியா), உதயகுமார் (பிரித்தானியா), அமலன்(கனடா), ஜீவன் ஜெகநாதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

இவர் கிருபனா, சேயோன், சஜனுதா, காலஞ்சென்ற ரிஷான், கார்த்திக், குகன், பிரவீனா, மிதுஷா, சிந்துஜன், ட்றிஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, மகேஸ்வரி, ராசரத்தினம், தர்மலிங்கம், கனகசுந்தரம், திலகவதி மற்றும் சிவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்