மரண அறிவித்தல்

திருமதி. மகேஸ்வரி சபாரத்தினம்

Tribute Now

யாழ் பன்னாலையைச் சேர்ந்த மகேஸ்வரி சபாரத்தினம் (பவா அக்கா) 27.07.2022 (புதன்கிழமை)  காலமானார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான  ஐரோப்பியன்  வேலுப்பிள்ளை - பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான   செல்லையா - பொன்னம்மா தம்பதியினரின்  மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், மகாஜனாக்கல்லூரி பழையமாணவர்கள் கணேசன் (ஆயுள்வேத மருத்துவர்), சபேசன் (மின் அத்தியட்சகர் - யாழ் வழாகம்) ,காலஞ்சென்ற கௌரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் குமாரலோஜினி (பல் மருத்துவர்), ரமணி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு  மாமியாரும் ஆவார். 

 

இவர் தீபிகா ,சண்முகசாயி ஆகியோரின் ஆசை பேர்த்தியும் ஆவார். 

 

இவர் ரட்ணசிங்கம், யோகேந்திரன், நீலலோஜினி, நேசமலர் காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி சிவசுப்பிரமணியம் , பத்மநாதன்  ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்