மரண அறிவித்தல்

திரு. மு.மூக்கையாப்பிள்ளை

Tribute Now

திருச்சி மாவட்டம், திண்ணனூர் கிராமம், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீதேவி பவுண் புரோக்கர்ஸ் திரு.மு.மூக்கையாபிள்ளை அவர்கள் 01.03.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் தெய்வத்திரு திண்ணனூர்  சொ.மா.முத்துசாமிபிள்ளை – காமாட்சியம்பாள் தம்பதிகளின் மகனும், நோர்வூட் திண்ணனூர் தெய்வத்திரு அருணாசம்பிள்ளை – செல்லம்மாள் தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

இவர் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், செந்தில்குமரன், ஸ்ரீதரன், விஜய்பிரதீஸ் (சிங்கப்பூர்) ஆகியோரின் அருமைத் தகப்பனாரும் ஆவார். 

 

இவர் பிரவீணா, அன்ரியா, சாகரி, கார்த்திக் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார். 

 

இவர் சனாயா, சமாயா, அஷ்வந், அவ்னிஸ், மெத் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார். 

 

இவர் திருநேத்திரா, ரிஷான் ஆகியோரின் தாத்தாவும் ஆவார். 

 

இவர் திரு.புஸ்பநாதன், திலகராணி, தெய்வத்திரு விஸ்ணுமூர்த்தி, வதனி, திரு.சுவாதி, ராஜேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். 

 

இவர் திருச்சி கந்தசாமி, தியாகராஜா (நந்தினி ஜீவலர்ஸ்), தெய்வத்திரு சிவராமன் சண்முகநாதன் ஆகியோரின் மாப்பிள்ளையும் ஆவார்.

 

இவர் திருமதி. தனலட்சுமி, திருமதி.விஜயலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் தெய்வத்திரு முத்துசாமிபிள்ளை, தெய்வத்திரு ராஜீ ஆகியோரின் சகலையும் ஆவார். 

 

இவர் திருச்சி மாரிமுத்து, தெய்வத்திரு நாகம்மாள், லீலாவதி ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்