மரண அறிவித்தல்

திருமதி. லூசியா பாவிலுப்பிள்ளை

Tribute Now

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு  போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  லூசியா பாவிலுப்பிள்ளை அவர்கள் 20.07.2024  (சனிக்கிழமை) அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை - மேரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், மடுத்தீன் - வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும், டொறின் பியற்றீஸ் பபி (சுவிஸ்), பேளின் சுமதி (கனடா), காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி,றெஜினோல்ட், ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, மேரி இசபெல் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

மரியதிரேசா, காலஞ்சென்ற அந்தோனிமுத்து தோமஸ்  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

காலஞ்சென்ற ஜோன்சன் (சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ் (கனடா), வசந்தி மாலா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

எரிக்-கரோலின் (சுவிஸ்), கமிலா (சுவிஸ்), தொம்சன் (சுவிஸ்), அஜந்தன்-கன்டீஸ் (கனடா), அஜித்தா (கனடா), டியோன் டயஸ் (இலண்டன்), டானியேல் டினேஸ் (இலண்டன்), டிசாந்தன் (இலண்டன்), டினுசா (இலண்டன்), டிலக்சன் (இலங்கை), விதுசா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

 

மணிசாமியா, நெவின் லியோ, சீக் அன்ரனி, மானஷ் றெஜி, நேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

அமிர்தநாதன், அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அவர்களின் சிறிய தாயும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்