மரண அறிவித்தல்

திருமதி. குணரத்தினம் கமலராணி

Tribute Now

யாழ். துணுக்காயைப் பிறப்பிடமாகவும், புத்தூர் நவற்கிரி, சுவிஸ் Bern Rubigen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் கமலராணி அவர்கள் 14.07.2022 (வியாழக்கிழமை) அன்று பேர்ணில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் குணரத்தினம் (குணம்) அவர்களின் பாசமிகு மனைவியும், றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் ஐங்கரன், நிக்கோ, டொமினிக் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் றிஷா, கவிஷன், மதிஷன், பென்கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை (கனடா), கமலநாதன் (கொழும்பு) மற்றும் கனகாம்பிகை (கனடா), கனகராஜா (கனடா), வள்ளியம்மை (லண்டன்), கனகரத்தினம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் கனகரத்தினம், செல்வரத்தினம், காலஞ்சென்ற இராசமணி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பையா, தங்கமலர், பரம்சோதிராஜா, சித்திரா, சிவனடியான், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்