மரண அறிவித்தல்

திரு. குலசிங்கம் செல்வகுமார்

மு/மல்லாவி மத்திய கல்லூரி பழய மாணவன் (A/L 2003 வர்த்தக பிரிவு)

Tribute Now

வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பிரான்சு நாட்டில் ஸ்ராஸ்பூர்க் நகரைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் 20.08.2022 (சனிக்கிழமை) இறைபதம் அடைந்தார்.

அன்னார் குலசிங்கம் – கருணாவதி அவர்களின் புத்திரனும் ஆவார். 

 

இவர் நவகுமார் (பாலன்), சுகந்தினி, உதயகுமார், விஜயகுமார், சுயதர்சினி (அகவிழி), சுகாஜினி, ரேணுகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். 

 

சிறிபவான், தேவமனோகரி, உசாந்தினி, தவச்செல்வன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் சிந்துயன், தழிழ்க்குமரன், சுவர்ணா, மதிவதனி ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

இவர் புயலவன், கலைமதி, சமரொளி, புயலின்பன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்