மரண அறிவித்தல்

திரு. கதிர்காமு பாலசுந்தரம் (பாலன்)

Tribute Now

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பாலசுந்தரம் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வீரவாகு கண்மணி தம்பதிகள், குமார் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.

 

புஸ்பவதி, காலஞ்சென்ற பாலசிங்கம்(சந்திரன்), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, சசீலாதேவி, தர்மகுமார் மற்றும் மோகனசுந்தரம்(K.M.S. மோகன்-பிரான்ஸ்), பிறேமாவதி, மோகனாவதி, சுசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றர்களான துரைசிங்கம், சரஸ்வதிதேவி மற்றும் செல்வராசா, சேதுராகினி, சுவீந்திரன், சதீஸ்குமார், சங்கீதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

தகவல் - குடும்பத்தினர்