மரண அறிவித்தல்

திரு. கதிர்காமர் பாலசுந்தரம்

(யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர் ,சமூக ஆர்வலர் , இலக்கியவாளர்)

Tribute Now

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, புறூனை, லண்டன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமர் பாலசுந்தரம்  அவர்கள் 01.06.2024  (சனிக்கிழமை) அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் - வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற  கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும், Dr. கயல்விழி (கீத்தா), யாழ்கோவன் (தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

யுசிலானந்தன்,  சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

Dr. யவ்வனா, மிதுசனா (ஆசிரியர்), Dr. ருக்சன், லூக் (உதவி அதிபர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (தமிழரசு), தர்மலிங்கம், இராசலிங்கம்  மற்றும் செல்வபாக்கியம், பரமேஸ், பூமணி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.

 

தகவல் | குடும்பத்தினர்