மரண அறிவித்தல்

திரு. கதிரேசு சின்னத்தம்பி

முன்னாள் Ceylon Theatres ஊழியர்

Tribute Now

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சின்னத்தம்பி அவர்கள் 14.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு - தங்கபேத்தி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பையா - முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற அருந்தவச்செல்வம் அவர்களின் அன்புக் கணவரும், முரளிகிருஷ்ணன், மீரா, உமை, ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்வம், சிதம்பரம், பொன்னையா, கதிராசிப்பிள்ளை, சரஸ்வதி, விநாசித்தம்பி, வல்லிபுரம், அப்புத்துரை, சுப்பிரமணியம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஷெரின், றோய், ஜெயக்குமார், உமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

திருக்கிருஷ்ணன், ஷபீனா, அருண், ஏட்றீயன், கவின், சோபியா, பார்த்தகுமார், அபிநந்தகுமார், விதுஷன், துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:-  குடும்பத்தினர்