மரண அறிவித்தல்

திரு. காசிப்பிள்ளை கணேசலிங்கம்

Tribute Now

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், Lausanne சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 31.01.2024 (புதன்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - சீதாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருமைநாயகம் - இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கோவந்தராணி அவர்களின் பாசமிகு கணவரும், சரண்யா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கணேசநாதன் (சுவிஸ்), நவமணிதேவி (இலங்கை), தனலக்சுமி (கனடா) ஆகியோரின் அன்புச சகோதரரும் ஆவார்.

 

சுமித்திரன் (சுவிஸ்), சுகிர்தன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

விபுலானந்தராசா துஷியந்தி (கனடா), கோகுலதாஸ் லலிதா (இலங்கை), சிவதர்சன் (இலங்கை), சிவரஞ்சன் (இலங்கை), சிந்துஜா (இலங்கை), சாயிசன் (கனடா), சாயினி (கனடா), சாகீரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

அருமைநாயகம், சண்முகதாஸ், பொன்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ஜெயந்தகுமார் (சயந்தன்-லண்டன்), நாகசயந்தினி (ஓய்வுபெற்ற உபதபால் அதிபர் - கோண்டாவில் மேற்கு), லோகேஸ்வரன் (சுவிஸ்), ஆனந்தமுருகன் (லண்டன்), ஜெயந்தாதேவி (இலங்கை), சந்திரகுமார் (லண்டன்), காலஞ்சென்ற ரோஹினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்