மரண அறிவித்தல்

திரு. கந்தசாமி விஜயரத்தினம்

Tribute Now

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி விஜயரத்தினம் அவர்கள் 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி - நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா, யோகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும், மயூரன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் தவமலர் (கொழும்பு), சிவமலர் (வேலணை), காலஞ்சென்ற கிருபரத்தினம், சோதிமலர் (கனடா), சிங்கரத்தினம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கனகரத்தினம், உதயகுமார் (வேலணை), கலாராணி (இந்தியா), சிவபூஷணம் (கனடா), தேவமாலா (லண்டன்), கலாரஞ்சிதம் (கொழும்பு), சாந்தினி (தென்னாபிரிக்கா), நந்தினி (கனடா), ஞானவேல் (லண்டன்), ஜெயந்தினி (லண்டன்), வேல்விழி (சுவிஸ்), கதிர்வேல் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்