மரண அறிவித்தல்

திரு. கந்தையா விவேகானந்தராஜா

Tribute Now

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges Sarcelles, Étampes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விவேகானந்தராஜா அவர்கள் 14-12-2021 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் மருமகனும், வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும், தயா, சுகி, நந்தன், சுகனி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கஜேந்தினி, மோகன், விக்கி, லிலியான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பரமானந்தராஜா, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விசாகராஜா, கந்தசாமி மற்றும் நேசராஜா, தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணம், சற்குரு, கிருபா, வனஜா, சொரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிவேத், தருண், அபிஷா, ஆகாஸ், ஆரணி, தைனா, லோறினா, ஜோஸ்வா (தேவ்), சுயானா, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்