மரண அறிவித்தல்

திரு. கந்தையா பத்மநாதன்

Tribute Now

காரைநகர்  வேதரடைப்பை  பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா பத்மநாதன் ( ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் இலங்கை வங்கி)  அவர்கள் 17.04.2023 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் வேலுப்பிள்ளை கந்தையா ( முகத்துவாரம் ) , பொண்ணாச்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக்கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற நிர்மலா, காலஞ்சென்ற ஈஸ்வரநாதன் ( ஓய்வு பெற்ற சிரேஸ்ட முகாமையாளர் Commercial Bank) , கைலையங்கிரிநாதன் ( Commercial Construction Commercial Hardware ), சக்திலா ( ஓய்வு பெற்ற கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி HNB ), பவநாதன் ( Senior Technical Engineer, Emirates Airlines - Dubai) ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.

 

பாலகிருஷ்ணன் ( ஓய்வு பெற்ற பொறியியலாளர் - Australia) , திலகவதி, பங்கையற் செல்வி ( ஆசிரியை - கொழும்பு விவேகானந்தா கல்லூரி ) , சிவானந்தராஜா ( நில அளவையாளர் நாயகம் ) , நேசமலர் ( Dubai ) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

துஷ்யந்தன், துஷிக்கா, தேவகா, பிரமானந்தன் இஷ்டவரன், சயந்தன், கிஷானி, அரபிந்த், பவதாரிணி, ஹரிகரன், இந்து, சயந்தூரன், சிவகணேசன், கோகுலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆரியன், அரன், அயன், சேயோன், ஆதூரன், மாலவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்