மரண அறிவித்தல்

திரு. கந்தையா துரைராஜா

Tribute Now

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கனகரெட்னம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் வளர்ப்பு மகன் ஆவார்.

 

தனலெட்சுமி(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் -யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும், யுலக்‌ஷனா, கஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,கேதீஸ், தினேஷ்குமார், யுவகாந், சனுகாந் ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்.

 

நித்தியானந்தன், இந்திராணி, மனோரஞ்சிதம், விஜயலட்சுமி, தயாநிதி, காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் இப்ராகிம், சிவசோதி ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

கோமதி, காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ராஜா மற்றும் கிருபாலிங்கம், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும், சமித்திரா, ரித்திகா, வர்ஜிதன், சுபிக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்