மரண அறிவித்தல்

திரு. கந்தையா மார்க்கண்டன் (Tractor மார்க்கண்டு)

Tribute Now

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 4ம் வட்டாரம், Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மார்க்கண்டன் அவர்கள் 23.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகநாதி - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் அம்பிகைநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும், மாலினி, கோடீஸ்வரன், அருளினி, சிவனேஸ்வரன், அருளீஸ்வரன், யோகீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் சச்சிதானந்தன், சியாமிளா, விநாயகமூர்த்தி, பாமதி, கஜனி, அஜந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

இவர் தனலெட்சுமி, மங்களாதேவி, ஸ்ரீநிவாசன், பேரின்பரதி, ராமச்சந்திரன், காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, கோபாலபிள்ளை மற்றும் காந்தா, சிவலிங்கம், விமலாதேவி, கந்தலிங்கம், காலஞ்சென்ற நமசிவாயம், சின்னக்குட்டி, தையல்நாயகி, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் மனோன்மணி, காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, நடராசா மற்றும் கமாலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

 

இவர் திவ்வியா, கீர்த்திகா, கீர்த்தனா, விஷாந், சாபிகா, விபுலன், ரகுலன், ரதீஷா, யதுஷன், பிரவீன், பிரவீனா, ரக்‌ஷினி, துஷ்யந், பிரவீன், சர்வீன், மதுமிகா, கனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:-  குடும்பத்தினர்