மரண அறிவித்தல்

திரு. கந்தசாமி நல்லையா

Tribute Now

யாழ் மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தினை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பினை தற்காலிக வதிவிடமாக கொண்டவருமான திரு. கந்தசாமி நல்லையா (ஓய்வுபெற்ற பிரதி அதிபர்) 14.08.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தசாமி, சிதம்பரம்  தம்பதியினரின் பாசமிகு மகனும், அமரர். கந்தையா (ஆயுள்வேத வைத்தியர்)  - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இன்பவதியின்   அன்புக்  கணவரும், பிரதிபா, பிரசன்னா (மக்கள்வங்கி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

சிவகுமாரனின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கனகரத்தினம், குகநாதன், நிர்மலாதேவி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். 

 

நாகேஸ்வரி, கெளரி, வரதராஜா, ஈஸ்வரி, மல்லிகாவதி, சத்தியவதி, கோகுலவதி,பரமநாதன் ஜமுனாவதி,குகவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

ராஜன் பூபாலசிங்கம், சார்வானந்தன், கனேஷ்குமார், மோகனதாஸ், விஜிதரன், கிருயாணி ஆகியோரின் சகலனும் ஆவார். 

 

யாழினி, தமிழினி, மாதினி, சொரூபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார். 

 

றஜுவன் மீரா, அபிராமி, சாதுரியா, பிரவீனன், இந்துஷன், ஹர்ஷன் சர்மிகா, சதூஷன், அகிலவன், ஆதீசன், கேஷான், றீஷான், காவியன்,  கவினயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

 

மகினிஷ், மானுஷ், மெளறிஷ் சாலினி, சாமினி, ஷாரா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். 

 

சிவானி, ஸ்ரேனா, சித்திரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்