மரண அறிவித்தல்

திரு. கந்தசாமி நாகலிங்கம்

Tribute Now

யாழ்ப்பாணம் வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி நாகலிங்கம் அவர்கள் 26.12.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.நாகலிங்கம், திருமதி.தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.கனகராஜா, திருமதி.கண்மணி  தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் சற்குருராணி அவர்களின் பாசமிகு கணவரும், சுனேகா, சுனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் வினோத், சுயா, சுரேஸ், சுஜிதா,சுரேகா, சுஜீவன், விக்னா, நீலன், சரணி, பானுசா, சீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

இவர் சின்னதம்பி, காலஞ்சென்ற நவரத்தினம், சிவயோகவள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் சரஸ்வதி, மல்லிகாதேவி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்வராணி, காலஞ்சென்ற தங்கராணி, பாலராஜா, பத்மராணி, விமலராணி, தர்மராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சிவஞானம், சுகுமார், பவானி, ராஜதுரை, மனோகரன், கரிகரன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார். 

 

இவர் பிரகீன், பிரிசா, அஸ்விகா, ஆரூஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்