மரண அறிவித்தல்

திருமதி. கமலாராணி சுந்தரராமலிங்கம்

Tribute Now

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14-12-2021 (செவ்வாய்க்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா - கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் - விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரராமலிங்கம் (தேசிய உப்பள கூட்டுத்தாபனம்- ஆனையிறவு) அவர்களின் பாசமிகு மனைவியும், சுமதி (Toronto), கலைவாணி (அதிபர், சிவபூமி பாடசாலை, கோண்டாவில், உபதலைவர்- சிவபூமி அறக்கட்டளை), கஜராம் (உரிமையாளர் மொன்றியால், கணேஷா பார்ட்டி பலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சரவணபவன்(Toronto), Dr. குகதாசன்(யாழ் கண்சத்திரசிகிச்சை நிபுணர்- இலங்கை), தர்மினி(Montreal) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, ஆனந்தராசா, மற்றும் அம்பிகாபதி (அம்பி- Toronto), ஜனார்தசிங் (ஜனா- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற குலசேகரம், ரஞ்சனாதேவி, பாக்கியதேவி, ரஞ்சிதமலர், வாசுகி, காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், ஜீவரத்தினம், அன்னலட்சுமி, ராமநாதன், நவரத்தினம், பூரணம் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், Dr. தீபன்- Dr. ஒஸ்ரா (Buffalo), திவ்யன்- சோனியா (Toronto), லிஷாயினி- நிதர்சன் (நியூசிலாந்து), ஷஞ்ஜீவா- கார்த்திகா (கொழும்பு), கன்யா (Medical Student) (USA/ Montreal), காணன் (Montreal) ஆகியோரின் அன்புப் பேத்தியும், அருணாஸ், டேனியஸ், இந்திரா, ஷஜிகன், ரேஷிகா, லக்ஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்

இரங்கல்கள்

  • ஆழ்ந்த இரங்கல்கள் சோம் அங்காடி, — Sri Lanka