மரண அறிவித்தல்

திரு. இந்திரலிங்கம் கனகலிங்கம்

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இந்திரலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 02.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் - இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  ஆறுமுகம் - மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தங்கராணி(ராணி- Rani fashion- Tooting) அவர்களின் பாசமிகு கணவரும், ராகவன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

தியாகலிங்கம்(லண்டன்), சிவாஜிலிங்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – இலங்கை), வசந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

நகுலேஸ்வரன்(நகுலன்– இலங்கை), தேவராணி(தேவி– இலங்கை), மகாதேவி (Caaveiry silKs – Mitcham), ஆனந்தநாயகி(ஆனந்தி– லண்டன்), காலஞ்சென்ற பத்மாவதி(லெப்டினல் கேணல் நளாயினி), தனராஜன்(ராசன்-கனடா), நவீந்திரன்(நவி- லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்