மரண அறிவித்தல்

திருமதி. ஞானேஸ்வரி (சாந்தா) தனபாலசிங்கம்

Tribute Now

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும்,  சரவணை கிழக்கை  புகுந்த இடமாகவும் , பிரான்ஸ் நாட்டில் தற்போது வசித்து வந்தவருமான  திருமதி ஞானேஸ்வரி (சாந்தா) தனபாலசிங்கம் அவர்கள் 20.03.2024 (புதன்கிழமை) அன்று  பிரான்ஸ் நாட்டில் சிவபதமெய்திவிட்டார்.   

அன்னார் காலம்சென்றவர்களான ஆசிரியர் நடராசா -  நீலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலம்சென்றவர்களான சோமசுந்தரம் - சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும் ஆவார்.

 

தனபாலசிங்கம் (தனபால்) (முன்னாள் வேலணை ப.நோ.கூ.சங்கம்) அவர்களின் அன்புத் துணைவியாரும், மயூரன், பாலன், குசன், உத்தமி, ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சிறிதரன் (கனடா) , சிறிரஞ்சன் (இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

 

செல்வராணி (வேவி), புஸ்பராணி (ஆச்சி) , கந்தசாமி (ராசன்) , விஜயராணி (தஞ்சம்), இந்திராணி (வசந்தா), காலம்சென்ற சர்வானந்தன் மற்றும் வசந்தராணி (சுந்தரி), கந்தவேள் (குகன்), ஜெயராணி (தங்கச்சி) ஆகியோரின் அண்ணியாரும் ஆவார்.

 

பரநிருபசிங்கம், தவபாலன், சிவலிங்கம், பரமேஸ்வரன் (கடவுள்) சத்தியமூர்த்தி (சத்தியம்), சிவநேசன், வாசுகி, அமரர் குணாநிதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

சிவரஞ்சனி (கலா), மங்களவாணி (சித்ரா) ஆகியோரின் சகலியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்