மரண அறிவித்தல்

திருமதி. ஞானசேகரம் பேரின்பவதி

Tribute Now

யாழ். வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பேரின்பவதி அவர்கள் 06.10.2022 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - பகீரதலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற ஞானசிவம் - காமாட்சி தம்பதிகளின் அருமை மருமகளும் ஆவார்.

 

இவர் ஞானசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும், காயத்திரி, பிரியங்கா (ஆசிரியை, யா/வேலணை மத்திய கல்லூரி), தர்ஷி (யாழ் மருத்துவபீடம், 3ம் வருட மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் ஸ்ரீதரன், கிருஷ்ணகுமார் (பொறியியலாளர் GSMB) ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

இவர் கமலாவதி (ஆசிரியை, யா/நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), சரஸ்வதி (சுவிஸ்), அருந்தவராசா (சுவிஸ்), சந்தானலட்சுமி (ஆசிரியை, யா/நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்), ஆனந்தராசா (அமெரிக்கா), பாக்கியலெட்சுமி (ஆசிரியை, கிளி/அழகாபுரி வித்தியாலயம்), பாக்கியராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் நிர்மலகுமார், சியாமா (சுவிஸ்), மனோரஞ்சிதன், ஜெயா (அமெரிக்கா), நிகேதரன் (ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்), தயாளினி (லண்டன்), ஞானதீபம், சிவஞானம் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

 

இவர் ஐஸ்ணவிகா, காவியா, ஸ்ரீநியா, ஸ்ரீபிரசாந், அஹானா, லக்‌ஷிகா, லக்க்ஷனா ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்