மரண அறிவித்தல்

திரு. அருந்தவமணி தர்மலிங்கம்

Tribute Now

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், Walthamstow லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமணி தர்மலிங்கம் அவர்கள் 14.05.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - அன்னம் தம்பதியினரின் ஆசை மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சின்னத்துரை தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிறிகாந்தன் (அதிபர்), செல்வராணி (ஜேர்மனி), சின்றல்லா (கனடா), இன்பநேசன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

புனிதராஜேஸ்வரி (பிரித்தானியா), தங்கராஜா (ஜேர்மனி), யோகேஸ்வரன் (கனடா), வளர்மதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

நிஷாந்-விதுஷானி (பிரித்தானியா), விதுனா-ஐங்கரன் (பிரித்தானியா), சபீந் - கிஷாலினி (பிரித்தானியா), பபின்சி (ஜேர்மனி), டென்சி (ஜேர்மனி), ஜனுஸ்கா (கனடா), சுஜானுகா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

லவன்சிகா, மதுஷன், டியாரிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்