மரண அறிவித்தல்

திரு. அருள்செல்வம் தம்பு

Tribute Now

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தரணியக்கலை, கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்செல்வம் தம்பு அவர்கள் 30.01.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு (தரணியக்கலை வர்த்தகர்) - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பொன்னம்மா (காமாட்சி டீச்சர்)  தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் சிவகாமசுந்தரி(சற்குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,ராகினி, சுபாஜினி, நிரஞ்சன், சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் பாஸ்கரன், சுரேஷ்குமார், நிரஞ்சனி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற நவமணி, திருச்செல்வம் (லண்டன்), காலம்சென்றவர்களான பன்னீர்செல்வம், தம்புச்செல்வம், கதிர்காமச்செல்வம் மற்றும் செல்வராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பாக்கியநாதன், புஷ்பா, சரோஜினிதேவி, இரஞ்சிதகுமாரி, விவேகானந்தன் மற்றும் தர்மபாலன், ரவீந்திரபாலன், சிவயோகம், காலஞ்சென்ற சிவராசா, யோகராசா, அன்பழகன், வெற்றிச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

இவர் பிரியங்கா, சிந்தியா, சிவன், கெவின்ராஜா, ஜனித்தா, ஆதித்தியன், அஸ்வினா, ஆரவி, அயிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்