மரண அறிவித்தல்

திருமதி. அன்னம் சுப்ரமணியம்

Tribute Now

யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு , மரதன் கடவல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னம் சுப்பிரமணியம் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமாந்தர் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற தம்பாபிள்ளை சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

மணிசேகரன்(ஜேர்மனி), சறோஜா(இலங்கை), சாந்தா(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

ராஜி, ஆனந்தராஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

அத்துடன் மகிழினி, மதுஷன், ஹரிஸ், பிரஜீத்- செல்வமதி, நிதுஷானி, விதுரன்- யாழினி, தூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும், மாயா, அரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), சிவசுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற அதிபர்- சந்திரோதயா கல்லூரி, உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்லையா(ஓய்வுபெற்ற ஆசிரியர், விஷகடி வைத்தியர்), இலட்சுமி, இராசமணி, முத்தையா- பூமணி, துரைராஜா- மகேஸ்வரி, பாலசிங்கம்(ஓய்வுபெற்ற தபால் திணைக்களம்)- அன்னலட்சுமி, நேசம்மா- முத்தையா, கனகம்மா- சிங்கராஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்), செல்வரட்ணம்(பொறியியலாளர்), மங்களபூபதி(லண்டன்- ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்