மரண அறிவித்தல்

திருமதி. அன்னலட்சுமி irajaradna இராஜரட்ணம்

Tribute Now

யாழ். ஏழாலை வடக்கு ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஊரங்குணை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராஜரட்ணம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசிங்கர் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, விஸ்வலிங்கம், சுவாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அத்துடன் நவநாதன்(நவம்), மனோகரன்(சின்னா), சிவகுமார்(ஜெயா), புவனேந்திரன்(கண்ணா) ஆகியோரின் அன்புத் தாயாரும், வத்சலா, தேன்மொழி, அனுஷா, யமுனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

பவ்யா- கமலேஷ், வர்மன், கிருஷாந்த், சிபானா, அனித், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்