மரண அறிவித்தல்

திருமதி. அன்னலட்சுமி (கிளி) குணரட்ணம்

Tribute Now

யாழ். ஊராங்குணையைப் பிறப்பிடமாகவும், ஊராங்குணை, குப்பிளான், இந்தியா சென்னை(அண்ணாநகர்), பிரான்ஸ் Toulouse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 24.06.2023 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் - தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இ. குணரட்ணம்(ஊராங்குணை, பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும், பாலச்சந்திரன்(லண்டன்), ஜெயரூபி(லண்டன்), ஜெயராணி (பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), செந்தூரன் (பிரான்ஸ்), குகானந்தன்(பிரான்ஸ்), ஆரணி(குப்பிளான்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

கவிதா(லண்டன்), புவனேந்திரன்(லண்டன்), சிறீகாந்தன்(பிரான்ஸ்), பாரதி(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), கமலவாணி(பிரான்ஸ்), தேவநாயகி (பிரான்ஸ்), திருக்குமரன்(ஓமான்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னதம்பி(முத்துலிங்கம்), முத்துலட்சுமி (செல்லம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற பொன்னம்பலம்(இலங்கை), பாலநாதன்(பிரான்ஸ்), பாக்கியநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன், செல்வரட்ணம் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

பிரியங்கா, தனுசியா, தனுசியன்(லண்டன்), கிருத்திகன், திவ்வியா, துர்க்கா, சுவேதன்(லண்டன்), தர்சா, ஐங்கரன், தர்சிகன்(பிரான்ஸ்), தாட்சாயினி, தமிழினி, யதூசன்(பிரான்ஸ்), சுதர்சன், சாருசன், காவியா, வர்சன்(பிரான்ஸ்), கீர்த்தனா, தரணியா, அஸ்வின்(பிரான்ஸ்), சஞ்சய், சனோயன்(பிரான்ஸ்), ஆதிரா, ஆதித்தியா, அனித்திரா(குப்பிளான்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்